மண்ணை கவ்விய ‘சாமி 2’ படத்திற்காக பல கோடி சம்பளம் வாங்கிய நடிகர் விக்ரம்.! எத்தனை கோடி தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போதைய இவருடைய நடிப்பில் துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் 2, டேவிட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று  வரும் நிலையில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது. மேலும் விக்ரம் இந்த படங்களில் நடித்து முடித்துவிட்டு பிறகு தனது மகன் துரு விக்ரமுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் சாமி 2 திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் சாமி இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த திரிஷா நடித்திருந்தார்.

முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற நிலையில் பல வருடங்கள் கழித்து மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி படுதோல்வினை சந்தித்தது சாமி  படத்தின் இரண்டாவது பாகம். இந்தப் படத்தில் முதன்முறையாக விக்ரமுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த நிலையில் இவரை தொடர்ந்து சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு மற்றும் பாபி சிம்ஹா வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது 2018ஆம் ஆண்டு வெளியான சாமி 2 திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் ரூபாய் 12 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு படுதோல்வினை பெற்ற இந்த படத்திற்கு 12 கோடி என்பது மிகவும் அதிகமான ரசிகர்கள் கருத்தினை கூறி வருகின்றனர்.

Leave a Comment