நடிகர் விக்ரமை இந்த தோற்றத்தில் யாராவது பார்த்துள்ளீர்களா வைரலாகும் புகைப்படம்.

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் எப்பொழுதும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அதேபோல் இவர் படத்தை காண தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுப்பவர் விக்ரம்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் நீண்ட காலமாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கல்கியின் கதையான இதை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள்.

நடிகர் விக்ரம் எப்பொழுதும் தனது படத்திற்காக மிகவும் தனது உடலை வருத்தி உழைக்க கூடியவர். அந்த வகையில் சேது, தெய்வ திருமகள்,ஐ  ஆகிய திரைப்படத்தை உதாரணமாகக் கூறலாம். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப் படத்தில் விக்ரமின் எப்படி இருக்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் டீத்தூள் விளம்பரத்தில் நடித்து இருந்தார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

vikram

Leave a Comment

Exit mobile version