தொடர் தோல்வியால் சூப்பர்ஸ்டார் இயக்குனருடன் கைகோர்க்கும் சியான் விக்ரம்.? இந்த முறை வேற லெவல்

கடைசியாக சியான் விக்ரம் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் பார்த்தது அதன் பிறகு அதர்வா நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த இமைக்காநொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் விக்ரம் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஒரு மெகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் சோழ மன்னார் ஆதித்ய கரிகாலனாக நடித்து வருகிறார். மேலும் விக்ரம் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் அடுத்ததாக தன்னுடைய அறுபதாவது திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது, கார்த்திக் சுப்பராஜ் தனுஷின் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் அந்த திரைப்படம் முடிவடைந்து இருக்கலாம் என பலரும் கூறுகிறார்கள்.

இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளன, இந்தக் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment