தூள் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர்தான்.! வருந்தும் ரசிகர்கள்.!

Vijay Missed Movie : 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தூள் இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஜோதிகா ரீமா சென், விவேக் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், படத்திற்கு இசை அமைப்பாளராக வித்யாசாகர் இசையமைத்து இருந்தார், அதேபோல் படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார்.

தூள் திரைப்படம் இன்றும் ரசிகர்களிடம் பார்க்கத் தோன்றும் ஒரு திரைப்படம் ஆகும், இந்த திரைப்படம் வெளியாகி நான்கு மடங்கு வசூல் ஈட்டியது, படத்தின் பட்ஜெட் 7 கோடி தான் ஆனால் பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி வரை வசூல் செய்தது.

பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டான இந்த திரைப்படத்தில் முதன் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் மற்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை என அவரே தெரிவித்து விட்டாராம்.

அரசியல் சாயம் பூசப்பட்டு கமர்சியல் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்தது மிகப்பெரிய தவறு என தளபதி வருந்திய காலமும் உண்டு, இதனை ஒளிப்பதிவாளர் கோபிநாத் சமீபத்தில் ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார், இதுபோல் மெகாஹிட் திரைப்படமான கில்லி மற்றும் தூம் திரைப்படத்தில் விக்ரம் இடத்தில் விஜயும் விஜய் இடத்தில் தளபதியும் நடித்திருக்க வேண்டியது ஆனால் இருவரும் விட்டுக் கொடுத்து வெற்றியை கண்டார்கள்.

நடிகர் விஜய் மற்றும் விக்ரம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல் சிறந்த நண்பர்களும் கூட என அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Leave a Comment