சிங்கம் எப்படி கர்ஜிக்குமோ.. அதே மன நிலைமையில் தான் விக்ரம் நடித்தார் – பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சக நடிகர் பேட்டி.!

vikram
vikram

சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் என தொடங்கி அனைவருக்கும்  ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது அவரது கனவு ஒரு வழியாக இந்த பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.

முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படத்தின் பிரமோஷன் தற்போது பெரிய அளவில் நடந்து வருகிறது தமிழ்நாட்டையும் தாண்டி கேரளா பக்கமும் தற்போது  படக்குழு போய் வந்துள்ளது அண்மையில் ப்ரோமோஷன் ஒன்றில் நடிகர் விக்ரம்பிரபு பொன்னியின் செல்வன் படம் குறித்தும், நடிகர் விக்ரம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் என்ற கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் பிரபு ஆதித்யா கரிகாலான விக்ரமுடன் தான் அதிகமான காட்சிகள் இருந்தது. அதனால் விக்ரம் நடிப்பை  விக்ரம் பிரபு பார்ப்பாராம் அது குறித்து அவர் பேசியது. ஆதித்யா கரிகாலன் கேரக்டருக்கான வசனங்களை படித்துவிட்டு செட்டில் போய் நிற்பேன்.

ஆனால் அங்கு விக்ரம் நடிப்பதை பார்த்தால் அவ்வளவு வித்தியாசமாக இருக்கும் அந்த கேரக்டரை அவர் எடுத்து நடித்ததை பார்த்து நான் எனது வசனத்தையே மறந்து விட்டேன் எனக்கு பொன்னியின் செல்வனில் நடிப்பதை நம்பவே முடியவில்லை சிங்கம் என்ற மனநிலைமையில் தான் விக்ரமின் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும். இந்த படத்தில் நடித்தது மறக்கவே முடியாத அனுபவம்..

vikram prabhu
vikram prabhu

எல்லா நடிகர்களின் நடிப்பையும் ரொம்பவும் ரசித்து பார்த்தேன் என வெளிப்படையாக விக்ரம் பிரபு கூறினார் ஒரு நடிகரே இன்னொரு நடிகரை பாராட்டுகிறார் என்றால் நடிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் எப்படி நடித்திருப்பார்கள் என்று பாருங்கள் நிச்சயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை..