விஜய் சேதுபதியின் இந்த திரைப்படம் திருட்டு கதையா? தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இவர்!! அடுத்து என்ன நடக்குமோ.

0

actor vijaysethupathys this movie is copy:விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் க.பெ. ரணசிங்கம். மேலும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. அதனைதொடர்ந்து இந்த திரைப்படம்  தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் உருவாக உள்ளதாக பேசப்படுகிறது.

தற்போது விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை என்பது மட்டும் தெரிகிறது. இவர் ஏற்கனவே 800 திரைப்படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த சர்ச்சை எழும்பியுள்ளது..

இந்த க.பெ. ரணசிங்கம் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு கதைசொல்லி என்ற மாத இதழில் வெளியான சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கதை 2018 ஆம் ஆண்டு தூக்குகூடை என்ற புத்தகத்திலும் வெளியாகியுள்ளதாக புதுக்கோட்டையை சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் என்பவர் தற்போது புகார் அளித்துள்ளார்.

எனவே இதனால் இந்த திரைப்படத்திற்கு சிக்கல் வரும் என திரை பிரபலங்கள் கூறுகின்றனர்.