actor vijaysethupathi next movie update: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவரை மக்கள் செல்வன் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக ஒரு நடிகர் ஹீரோவாக நடித்து விட்டால் அதன் பிறகு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது தனக்கு பிடித்த கதாபாத்திரம் என்றால் துணிந்து நடித்துக் கொடுப்பார் அந்த வகையில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர வேடம் என பல்வேறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.
சமீபத்தில்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வெற்றி கண்டார் இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். திரைப்படத்தில் எதிர்பார்பனது அதிகரித்துவிட்டது.
மேலும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல இரண்டு காதல், அனபெல் சுப்பிரமணியன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் மிக பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமீபத்திய துக்ளக் தர்பார், கடைசி விவசாயி மாமனிதன் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப் படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பிரமோஷன் மற்றும் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சீனு ராமசாமியுடன் ஏற்கனவே நான்கு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது ஐந்தாவது முறையாக அவருடன் கூட்டணி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் இத்திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு அவர்கள் தான் தயாரிக்க உள்ளாராம்.
மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.