actor vijaysethupathi next movie update: நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 800 என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார் பின்பு ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டார்.
அதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இவர் நடிக்காததால் இலங்கையை சேர்ந்த ஒருவர் ட்விட்டர் மூலம் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தனர். எனவே இந்த நிலையில் தற்போதுல இந்த திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகியதால் ரசிகர்கள் இவருக்கு பாராட்டுதலையும் நன்றியையும் செலுத்திவந்தனர்.
அதை தொடர்ந்து தற்போது இவர் பிரபாகரன் பற்றி வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிசை வீரப்பன் வாழ்க்கை வரலாறு மற்றும் ராஜீவ் கொலை வழக்கை திரைப்படமாக இயற்றிய இயக்குனர் ஏ எம் ஆர் ரமேஷ் அவர்கள் விஜய்சேதுபதியை வைத்து பிரபாகரன் கதாபாத்திரத்தில் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி அவர்கள் தற்ப்போது தான் ஒரு பிரச்சனை முடிந்தது இந்த நிலையில் மறுபடியும் பிரபாகரன் திரைப்படமா என ஆச்சரியத்தில் உள்ளாராம். வாழ்க்கை வரலாறு திரைப்படமே வேண்டாம் என பயத்தில் ஒடுகிறராம்.