முதன் முதலாக மிஷ்கின் இயக்கத்தில் இணைய போகும் விஜய் சேதுபதி..! அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா..?

actor vijaysethupathi joint to mishkin movie: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மிஷ்கின்.  இவர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிசாசு இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா அவர்கள் தான் தயாரித்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இவர்களுக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துக் கொடுத்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இந்த படக்குழுவினர்கள் முனைந்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த பிசாசு கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் மற்றும் சில கதாபாத்திரத்தில் பூர்ணா, சந்தோஷ், பிரதாப் போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த பிசாசு இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்கள்.

முதல் பாகத்தை போல இந்த இரண்டாம் பாகத்திலும் பிசாசு  கதாபாத்திரம்தான் முக்கிய கதாபாத்திரமாக அமைந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சூப்பரான மெசேஜ் சொல்ல போவதாக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கூறியுள்ளார்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு இந்த திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகர் இணைய உள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது நமது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தான்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நவீன பேய் ஓட்டும் மனிதனாக அறிமுகமாவார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபக்கு கொடுக்கும் கதாபாத்திரம் ஆனது மிக சிறிய கதாபாத்திரம்  என்பதால் இதை ஒரு கெஸ்ட் ரோல் என்று கூட சொல்லலாம்.

pisasu
pisasu

Leave a Comment