விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்திருக்கிறீர்களா.? வைரல் புகைப்படம்..

Actor Vijay: நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து தளபதி விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படி கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஹிட் அடித்தது. இந்த படத்தினை தொடர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தில் விஜய் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்புகளை சில தினங்களுக்கு முன்பு முடித்துள்ளார். மேலும் விஜயின் 68வது படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா விஜயின் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். எனவே தற்போது தளபதி 68 படத்தின் முதல் கட்டப்பணிகள் ஆரம்பமாகி இருக்கும் நிலையில் மறுபுறம் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் காட்சி நிர்வாகிகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது, நடிகர் விஜய் மருத்துவர் சங்கீதாவை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 26 2 ஆண்டுகள் கடந்துள்ளது.

sangeedha home
sangeedha home

விஜயின் தீவிர ரசிகை தான் சங்கீதா, சங்கீதா இலங்கையைச் சேர்ந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அப்படி சங்கீதாவின் இலங்கை வீட்டு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது அதனை தற்போது வேறு ஒரு நபர் வாங்கி இருக்கிறாராம்.

Leave a Comment