படப்பிடிப்பின் பொழுது பிரபல நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விஜயின் மகன் மற்றும் மகள்.! வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வரும் நடிகர் விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை கண்டது இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் நியூ படத்தின் முழு படம் பிடிக்கும் நிறைவடைய இருக்கிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தில் தனது காட்சியின் காண படப்பிடிப்புகளை விஜய் நடித்து முடித்தார்.

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது படத்தின் நடிக்க இருக்கும் நிலையில் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்பொழுது மக்களுக்கு முழு வீச்சியுடன் தனது மக்கள் மன்றத்தின் மூலம் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

பொதுவாக விஜயின் குடும்பத்தில் இருப்பவர்கள் பெரிதாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதில்லை. மிகவும் அரிதாக தான் இவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாக்குவது வழக்கம் அப்படி  நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தினை திரையரங்கிற்கு சென்று விஜயின் மனைவி சங்கீதா பார்த்தார்.

vijay son
vijay son

அங்கு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியிடம் நலம் விசாரித்து, வாழ்த்துக்கள் கூறி சென்ற வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனை அடுத்து தற்பொழுது விஜய்யின் மகன் மற்றும் மகள் பிரபல நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதாவது தெறி படத்தின் படப்பிடிப்பின் பொழுது மொட்டை ராஜேந்திரன் உடன் விஜயின் மகன் மற்றும் மகள் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர்.

Leave a Comment