விக் வைத்துள்ளாரா நடிகர் விஜய்? லியோ மூவி ஹேர் ஸ்டைல் மரண மாஸ்.. உண்மைகளைப் பகிர்ந்த விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட்

vijay
vijay

Vijay Leo Movie: நடிகர் விஜய் விக் வைத்திருக்கிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் விஜய்க்கு ஸ்டைலாக ஹேர் கட் செய்த தேவ் சக்திவேல் சமீப பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீப காலங்களாக விஜய் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் விஜய் காணப்படுகிறார் எனவே இதெல்லாம் விதவிதமான விக் என்று ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்க்கு தலையில் முடியே கிடையாது அனைத்துமே விக் தான் என சொல்லப்பட்டது ஆனால் இது அனைத்துமே பொய் என்று நடிகர் விஜய்க்கு லாங் ஹேர் முடி ரியலான ஒன்றுதான் என அவருக்கு ஹேர் ஸ்டைல் செய்த ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்தி சமீப பேட்டியில் பதில் அளித்துள்ளார். அவர் தனது ரசிகர்களுக்காக ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு லுக்கில் காட்சி தர வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் நடிகர் விஜய் என்றும் ஆறு மாத காலம் ஒரே ஹேர் ஸ்டைலுக்கு என்னிடம் கட்டிங் செய்வார்.

என்ன கட்டிங் என்று எதுவுமே சொல்ல மாட்டார் நீங்க பார்த்துக்கோங்க என அவர் சொல்வது நமக்கு பக்குனு இருக்கும். பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செம கூலாக இருப்பார். நான் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து பார்த்து செய்யும் பொறுப்பு என் மீது விழுந்த நிலையில் கவனத்துடன் செய்து கொடுப்பேன். அவருக்குப் பிடித்து விட்டால் சூப்பர் என பாராட்டுவார் என்றார்.

லியோ லுக்கை கட் செய்ய சொல்லும் பொழுது அதை வெட்டி முடித்ததும் எனக்கே சந்தோஷம் தாங்கல நிச்சயம் ரசிகர்களுக்கு திரையில் பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து. சார் இந்த லுக்குல ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என கேட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் என்றார். மேலும் ஸ்பெஷலாக தளபதி 68 பூஜையில் காட்டியது தளபதி 68 லுக்கா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. அந்த லுக்கையும் நான் தான் கட் செய்தேன் படம் வரப்போ தான் அது ரிவீல் ஆகும் என்னால் இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.