அச்சு அசல் அஜித்தை போல் முடிவெடுத்த விஜய் தேவர்கொண்டா.! கொண்டாடும் ரசிகர்கள்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய்தேவரகொண்டா இந்த இரண்டு தெலுங்கு சினிமாவினர்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்கள்.

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் ஒரு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 90% பிரிந்து விட்டதாகவும் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் தள அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது இந்தியா முழுவதும் கோரானாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் விரைவாக பரவி வருவதால் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் தேவர்கொண்டா LIGER திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தவகையில் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் தல அஜித்தை போல் விஜய் தேவர்கொண்டா தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகளவில் இருப்பதால் டீசர் வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வகையில் விஜய் தேவர்கொண்டா தற்போது கொரோனா அதிகமாக இருப்பதாகவும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜித் வெளியிட்டுள்ள அதே மாதிரி அறிக்கையை வெளியிட்டதால் தற்போது ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment