உங்களுக்கு வயசே ஆகாதா 55 வயதிலும் பொறாமை பட வைக்கிறீங்களே.! அருண் விஜய் அக்காவின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கேள்வி.

Kavitha Vijayakumar: விஜயகுமாரின் மூத்த மகளான கவிதா விஜயகுமாருக்கு தற்பொழுது 55 வயதாகும் நிலையில் ஆனால் கொஞ்சம் கூட அழகு குறையாமல் மிகவும் இளமையாக இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மகள் எப்பொழுதும் மிகவும் இளமையாக அழகாக காட்சி அளிப்பது வழக்கம் அப்படி இவர்கள் வெளியிடும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜயகுமாரின் மூத்த மகளும் மருத்துவருமான கவிதா விஜயகுமாரின் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகவே இருந்து வருகிறது.

50 வயதிலும் எப்படி 25 வயது இளம்பெண் போல் அழகாக ஜொலிக்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். தனது மகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே இதனைப் பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எல்லாம் வயதை ஆகாதா! எப்படி இவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறீங்க? என்று பொறாமையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

kavitha
kavitha

விஜயகுமாருக்கு பிறந்த முதல் மகள் தான் கவிதா எனவே விஜயகுமாருக்கு கவிதாவின் மீது தனி ஒரு பிரியம் இருந்து வருகிறது. அதேபோல் தன்னைவிட வயது குறைவாக இருக்கும் தங்கைகளை தாய் போல் பார்த்து வருகிறார். விஜயகுமாரின் மூத்த மனைவியின் பிள்ளை கவிதாவாக இருந்தாலும் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மகள்களை எப்பொழுதுமே இவர் பிரித்துப் பார்ப்பது கிடையாது.

kavitha vijayakumar
kavitha vijayakumar

அனைவருமே ஒரே குடும்பமாக தற்பொழுது வரையிலும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஏன் தற்பொழுது உள்ள கூட்டு குடும்பத்தினர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விஜயகுமாரின் குடும்பத்தினர்கள் இருந்து வருகிறார். இவ்வாறு கவிதா தமிழில் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் சங்கர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

kavitha
kavitha

தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் வீட்டு விசேஷம் என்றால் உடனே வந்து விடுவார். கவிதா விஜயகுமாருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அப்படி மகள் ஹாசினிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹன்சியின் நடிகர் அருண் விஜய் மனைவியின் தம்பியை திருமணம் செய்து உள்ளார். இவ்வாறு பாட்டி ஆனாலும் கூட மிகவும் அழகாக இளமை குறையாமல் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.