நடிகர் விஜய் ஒரு நாள் நடுத்தெருவுக்கு வருவார்.. சாபம் விட்ட பெண்

0
vijay
vijay

தளபதி விஜய் சினிமா உலகில் படிப்படியாக முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கூட சூப்பரா ஓடிக் கொண்டிருக்கிறது ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை பின் தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கும் பிடித்தவராக இவர் இருக்கிறார் இந்த நிலையில் பெண் ஒருவர் விஜய் நாசமாக போய்விடுவார்கள் என கூறியுள்ள வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

அந்த பெண் வேறு யாருமல்ல விஜயின் வீட்டில் வேலை பார்த்து வந்த ஏசி குமாரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஏசி குமார் விஜய்யின் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வந்தார் ஒரு கட்டத்தில் விஜயின் மக்கள் இயக்கம் பெரிய அளவில் பரப்ப அதில் ஒரு முக்கிய பொறுப்பிலும் ஏசி குமார் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற முனைப்பு எடுத்தார்

இந்த நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பலர் விஜய் பக்கம் செல்வதா அல்லது எஸ்.ஏ சந்திரசேகர் பக்கம் செல்வதா என தெரியாமல் மொழிப்பிதுங்கினர் பெரும்பாலானோர் விஜய் பக்கம் செல்ல ஒரு சிலர் எஸ் ஏ சந்திரசேகர் பக்கம் வந்தனர் அதில் ஒருவராக ஏசி குமார் இருந்துள்ளார். இது விஜய்க்கு பிடிக்காமல் போக.. மக்கள் இயக்கம் மற்றும் வீட்டு வேலையில் இருந்து உடனடியாக வெளியேற சொல்லுகிறார்.

இதோடு மட்டும் முடிந்து விடாமல் தங்கி இருந்த வீட்டை  விட்டு திடீரென வெளியேறுமாறு விஜய் கேட்டுக் கொண்டார் இதனால் அந்த குடும்பம் உடனே நடுத்தெருவுக்கு வந்தது கோபத்தில் ஏசி குமார் மனைவி ஒரு நாள் விஜய்யும் நடுத்தெருவுக்கு வருவார் என பேசிய சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.