Sangeetha net worth : 100 கோடி சம்பளம் வாங்கி என்ன பிரயோஜனம்.. விஜயை விட அதிக சொத்துக்கு அதிபதி சங்கீதா தானாம்.?

Actor vijay wife Sangeetha net worth: தளபதி விஜய் சினிமா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அதைவிட இவருடைய மனைவி சங்கீதா பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணாம் எனவே விஜய் பெயரில் இருக்கும் சொத்தை விட அவருடைய மனைவி சங்கீதா பெயரில் இருக்கும் சொத்துதான் அதிகம் என சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.

அப்படி கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 120 கோடி சம்பளமாக பெற்றாராம். அதோடு தனது 68வது படத்திற்காக 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக ஏற்றுக் கொண்டே இருக்கிறார் தளபதி விஜய்.

தளபதி 68 படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இவ்வாறு படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகை தொழில்கள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம். பொதுவாக விஜய், ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தொழில்களில் செய்தால் அது பெரிதாக வெளில் தெரிய வராது.

அப்படி தான் தளபதி விஜய் பல பிசினஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் சமீபத்தில் அரசியலுக்கும் பிள்ளையார் சுழி வைத்திருக்கும் நிலையில் இதற்கான செயல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது, பசி தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவு மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியது என பல தொண்டுகளை செய்து வருகிறார்.

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் ஆவார். இவருடைய தந்தை சொர்ணலிங்கம் தொழிலதிபர் மருத்துவரான சங்கீதா தளபதியின் தீவிர ரசிகை அவரைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு குடும்பத்தினர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

இவ்வாறு சங்கீதாவின் பெயரில் மட்டும் சுமார் 400 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் வாங்கும் தனது சொத்துக்களை சங்கீதா பெயரில் தான் எழுதி வைப்பாராம். எனவே விஜய்யின் பெயரில் இருக்கும் சொத்துகளை விட அவரின் மனைவி பெயரில் இருக்கும் சொத்துகளின் மதிப்பு தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.