BMW-வில் பலத்த பாதுகாப்புடன் கெத்தாக வந்த விஜய்.! அடுத்த சம்பவத்துக்கு தயாரா? தளபதி 68 படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

Thalapathy 68 Update: தளபதி விஜய் லியோ படத்தின் சக்சஸ் மீட்டை முடித்துவிட்டு உடனடியாக தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க இவரை தொடர்ந்து லைலா, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, ஜெயராம், விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இதற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தின் சக்ஸஸ் மீட்க்காக விஜய் சென்னை வந்தார்.

ஜீவானந்தம் சரிவதை பார்த்து என் பொண்டாட்டி கதறி அழனும்.! குணசேகரன் மிரட்டலுக்கு பயந்து நிற்கும் அப்பத்தா…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தற்போது வரையிலும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் பல கோடி வசூல் செய்ததால்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு ஏராளமான சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் இது அனைத்திற்கும் லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பதிலடி கொடுத்தார். சூப்பர் ஸ்டார் பட்டம் முதல் நான் ரெடி தான் பாடல் சர்ச்சை வரை அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே குட்டி ஸ்டோரியையும் கூறினார்.

லியோ வெற்றி விழாவில் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த நடிகை த்ரிஷா.? இது போதும் எங்களுக்கு..

விஜய் லியோ சக்ஸஸ் மீட்டில் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டிங்கை முடித்துவிட்டு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் தாய்லாந்து சென்றுள்ளார். பலத்த பாதுகாப்புடன் பிஎம்டபிள்யூ காரில் கெத்தாக விமான நிலையத்திற்கு வந்து தாய்லாந்து சென்றுள்ளார் விஜய். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அடுத்த வெற்றிக்கு தயாரா.. என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.