விஜய் வசந்தின் அழகிய மனைவியை பார்த்துள்ளீர்களா இதோ அவரே வெளியிட்ட பதிவு.!

vijay vasanth
vijay vasanth

பணக்காரரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமாகி ஆனால் சாதாரண மனிதன் போல் பெரிதாக பணக்காரன் என்ற பந்தா காட்டிக் கொள்ளாமல் சினிமாவில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர்  விஜய் வசந்த்.

இவர் பணக்காரராக இருந்தாலும் ஹீரோவாக நடிக்க விரும்பாமல் காமெடி நடிகராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் சென்னை 28, மங்காத்தா, பிரியாமணி, நண்பன், வேலைக்காரன் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

இதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவ்வாறு தொடர்ந்து நடித்து வந்த இவர் அவரின் அப்பாவின் மறைவுக்குப் பிறகு பிசினஸை பார்த்து வருகிறார்.  தற்பொழுது இவர் தான் வசந்த்ன் கோவின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் அதிக ஆர்வமுடையவராக திகழ்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.

எனவே இதற்கு மேல் சினிமாவில் நடிக்காமல் அடுத்தகட்ட பணியாக பொது மக்களுக்கு உதவ உள்ளார்.  இவர் இவ்வாறு வெற்றி பெறுவதற்கு காரணம் இவர் பணக்காரராக இருந்தாலும் மிகவும் திமிராக நடந்து கொள்ளாமல் சாதாரண மக்களைப் போல நடந்து கொள்வதுதான்.

இந்நிலையில் இன்று விஜய வசந்தனுக்கு கல்யாண நாள் என்பதால் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகிய மனைவியா முன்னணி நடிகையாகவே ஓரம் கட்டிடுவார் போல என்று புகழ்ந்து வருகிறார்கள் அதோடு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.