விழி மூடி யோசித்தால் பாடலை கேட்டுவிட்டு சூர்யாவுக்கு மெசேஜ் பண்ணிய நடிகர் விஜய்.? என்ன சொல்லி இருந்தார் தெரியுமா.? பல வருடம் கழித்து வெளியான செய்தி.

0

தமிழ் சினிமாவில் கடினமாக உழைத்து கொண்டு வரும் நடிகர்கள் என்றால் அது விஜய், சூர்யா தான் ஏனென்றால் படத்திற்காக தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு கதைக்கு ஏற்றவாறு ரெடியாக  இவர்களுடைய வழக்கம்.

அதனால்தான் இவர்கள் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதோடு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்கின்றன. நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வெற்றிகரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவரை போலவே நடிகர் சூர்யாவும் சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூலை 23 சூர்யா பிறந்தநாளில் வெளி வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யாவின் அயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு சுவாரஸ்யமான தகவலை சூர்யா பகிர்ந்தார் அவர் கூறியது.

நடிகர் விஜய் “அயன்” படத்தில் உள்ள விழி மூடி யோசித்தால் என்ற பாடலை கேட்டு விட்டு மாப்பு என்ன பாட்டுடா அது சூப்பர் மாப்பு என சூர்யாவிற்கு எஸ்எம்எஸ் செய்துள்ளாராம் அதை அப்பொழுது சூர்யா பகிர்ந்தார்.

தற்போது கூட இச்செய்தியை இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.