தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு போட்டியாக தற்போது ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
இவருக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி, பாடி லாங்குவேஜ், ஸ்டைல் என அனைத்தையும் மாற்றி சிறப்பாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் காத்ரினா கைப் உடன் சேர்ந்து மேரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்தத் திரைப்படத்திற்காக வித்தியாசமாக மூன்று கெட்டப்பில் ஃபோட்டோஷூட் எடுத்துள்ளார். கையில் போனுடன் ஒரு கெட்டப்பிலும், கோட்சூட் கூலர் என இன்னொரு கெட்டப்பிலும் பைக்கில் தொப்பியுடன் இளம் விஜய்சேதுபதியாக அழகாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் மாஸாக உள்ளது என கமெண்டுகளை தெரிக்க விடுகின்றனர் . இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.
