தமிழ் சினிமாவின் பல்வேறு வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விஜய் சேதுபதி அந்த வகையில் இவர் நடித்த வித்தியாசமான திரைப்படத்திற்கு எடுத்துக்காட்டாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற திரைப்படங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக இருப்பது மட்டுமல்லாமல் நிற்க கூட நேரம் இல்லாத அளவிற்கு பட வாய்ப்பை பெற்றுள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களாக தேடி தேடி நடித்துவிட்டு தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என அனைத்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் கதையில் கவனம் இல்லாத காரணத்தினால் விஜய் சேதுபதியை பார்த்து அவருடைய ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் தற்போது விஜய்சேதுபதி ஒரு பத்து திரை படத்தில் நடித்தால்தான் அதில் ஒரு திரைப்படம் வெற்றி கிடைக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்ட விஜய் சேதுபதி இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தில் நடித்து மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தீர்மானமாக உள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய உடல்நலம் பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் இருந்த நமது நடிகர் தற்போதெல்லாம் அதிகாலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்று விடுகிறாராம். இவ்வாறு விஜய் சேதுபதி சினிமாவில் மிக தீவிரமாக இறங்கியதை பார்த்தால் இவருடைய அடுத்த திரைப்படம் மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.