விஜய் சேதுபதியின் மகள் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.!

பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஏராளமானோர் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப் படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏன் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் வாரிசு நடிகர், நடிகைகளாக அறிமுகமானவர்கள் தான்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது மகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். விஜய்சேதுபதியின் மகளான ஸ்ரீஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் முகிழ். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இத்திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ்சாக உள்ளதாகவும், தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொதுவாக விஜய் சேதுபதி கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர் இதன் காரணமாகத் தான் இவர் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மிகவும் எதார்த்தமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு போன்ற மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

இப்படிப்பட்ட இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், வயதானவர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் தனது மகள் ஸ்ரீஜாவும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

mukizh

இத்திரைப்படத்தினை விஜய்சேதுபதி தயாரிக்க புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் குழந்தை வளர்ப்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து இத்திரைப்படம் இந்த மாதம் 8ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ்சாகும் என்றும் இத்திரைப்படத்தில் ரேவா என்ற பெண் இசையமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது இவர் பாடியுள்ள ஒரு பாடல் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Comment

Exit mobile version