தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி சினிமா உலகம் எப்படிப்பட்டது என்பதைப் படிப்படியாக உணர்ந்து அதற்கேற்றார்போல வளைந்து நெளிந்து கொடுத்து வந்துள்ளதால் தற்பொழுது அதற்கேற்றபடி நடித்து வெற்றி கண்டு வருகிறார்.
மேலும் சினிமாவில் கதைகளே ஒருவரை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை உணர்ந்து உள்ளதால் இவர் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.இந்த காரணத்தினால் தற்போது தெலுங்கிலும் நல்ல வரவேற்பு விஜய் சேதுபதிக்கு இருந்து வந்துள்ளது.
இருப்பினும் விஜய் சேதுபதிக்கு சமீப காலங்களாக பட வாய்ப்புகள் குவிந்தாலும் அந்த திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தாததால் தயாரிப்பாளர்கள் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் தற்பொழுது கூட விக்னேஷ் சிவனுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டும் அதன்மூலம் தனது பழைய நிலைமைக்கு அவர் திரும்புவார் என அவரும் அவரது ரசிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஏசி சார்பில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு நடிகர் விஜய் சேதுபதியும் 1கோடி நிதி உதவியாக வழங்க உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


