அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி.! தரமான பதில்.

vijay sethupathy
vijay sethupathy

நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய சினிமா உலகில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் கதை களம் சிறப்பாக இருந்தால் போதும் அதில் நடிப்பது அவரது ஸ்டைல் அதனால் தான் இவர் படங்களில் இவரது நடிப்பைப் பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.

இப்பொழுது கூட விஜய் சேதுபதி கையில் விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இன்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமாண்டிக் கலந்த படமாக உருவாகி இருப்பதால் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் அதில் அவர் சொன்னது :

இந்த கமெண்ட்டை நீங்கள் சொல்லவே கூடாது. உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் கமிட் செய்யவே தேவையில்லை. இது போகிறபோக்கில் விளம்பரத்திற்காக பேசுவது. அது அந்தக் கணக்கில் வராது. நடிகர்கள் ஒரு கணக்குப் போட்டு சம்பளத்தை கேட்கிறார்கள். உங்களால் அதை தர முடியவில்லை என்றால் வேறு நடிகரிடம் சொல்லப் போகிறீர்கள்.

அந்த நடிகர் தானாக சம்பளத்தை குறைத்துக் விட போகிறார். சம்பளம் என்பது நடிகர்களின் விருப்பம். இந்த எண்ணங்களை முதலில் விதைப்பது தவறு. அது குட்டி வேற போடுகிறது. என தனது ஸ்டைலில் பேசி முடித்தார் விஜய் சேதுபதி.