விஜய் சேதுபதியை தொந்தரவு செய்யும் பிரபல முன்னணி நடிகை.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் அப்பா.!

vijay sethupathi

சினிமா பின்னணி இல்லாமல் தனது சொந்த உழைப்பினால் சினிமாவில் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.  அதில் சிலர் எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரியாமல் சினிமா கேரியரை விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் தனது தந்திர முலையினால் தொடர்ந்து முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்கள்.

அந்தவகையில் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மிகவும் பக்காவாக ப்ளான் போட்டு நடித்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் எப்பொழுதுமே அதிகப்படியான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறார்கள்.

இவ்வாறு ஹீரோவாக நடித்து வந்த இவர் சமீப காலங்களாக வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறப்பு தோற்றத்திலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல ஒரு மெசேஜை மக்களுக்கு உணர்த்தியது.

இவர் சினிமாவில் வளர்ந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பதால் பிரபல நடிகை ஒருவர் எனக்கு சிபாரிசு செய்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தருமாறு விஜய்சேதுபதியை வலியுறுத்தி வருகிறாராம். அது வேறு யாரும் இல்லை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிட்டதட்ட ஐந்து திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவ்வாறு படக்குழுவினர்களிடம் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிபாரிசு செய்ய படக்குழுவினர்கள் தொடர்ந்து உங்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் எனவே ரசிகர்களுக்கு போரடித்து விடும் ஆகையால் வேண்டாம் விட்டுவிடுங்கள் என கூறிவிட்டார்களாம்.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு என்ன பதில் சொல்வது என்று விஜய் சேதுபதிக்கு தெரியவில்லையாம் எனவே சமீப காலங்களாக ஐஸ்வர்யா ராஜேஷை விஜய் சேதுபதி வெறுத்து வருகிறாராம். இப்படியெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய தகவல் வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நடிகை என்பதுதான் உண்மை.

aishwariya rajesh
aishwariya rajesh

ஏனென்றால் அவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் குழந்தைக்கு அம்மாவாகவும்,தங்கையாகவும் வேலைக்காரப் பெண் போலவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார்போல் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.