அரை டஜன் திரைப்படத்திற்கு மேல் நடிச்சது வேஸ்ட் தான் ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.! விஜய் சேதுபதி வேதனை

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் ட்ரெண்டிங்கான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தற்பொழுது வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த திரையுலகினர் ரசிகர்கள் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். என்றால் விஜய்க்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதோடு மாஸ்டர் திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் உப்பண்ணா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அந்த வகையில் இவரின் சிறந்த நடிப்பு திறமையையினால் இத்திரைப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே பல கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இவ்வாறு இவர் பல வெற்றிப்படங்களை தந்தாலும் இவர் நடித்துள்ள இன்னும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவராமல் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத் தமிழன் திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியதால் தற்போது இவரின் மார்க்கெட் மிகவும் அடிவாங்கி உள்ளது எனவே அந்த திரைப்படங்களை வெளியிட்டால் அதுவும் தோல்வி அடைந்து விடுமோ என்று தயாரிப்பாளர்கள் பயந்து வருகிறார்கள்.

அதோட விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் அதாவது ஒருசில தயாரிப்பு நிறுவனங்களை பொறுத்து இவர் சம்பளம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அந்த வகையில் துல்கர் தர்பார்,  லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை,  அனபெல்லா  சுப்பிரமணியம், மாமனிதன்,கடைசி விவசாயி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆனால் சங்கத் தமிழன் திரைப்படம் தோல்விக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியிடலாமா வேண்டாமா என தயாரிப்பாளர்கள் யோசித்து வருகிறார்களாம் ஆனால் விஜய் சேதுபதி மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ள அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றுள்ளது எனவே அதனை வைத்து திரைப்படங்களை ரிலீஸ் செய்யலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version