தனுஷின் மெக ஹிட் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட விஜய் சேதுபதி!! இந்த படத்தில் நடித்திருந்த இப்ப எங்கயோ போயிருக்கலாமே..

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வந்து தற்போது தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனங்களும் விஜய் சேதுபதியை தங்களது திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ந்து வாய்ப்புகளை கேட்டு வருகிறார்கள்.

ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கி வரும் இவர் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக சினிமாவில் மார்க்கெட் இல்லாத சமயத்தில் வில்லனாக நடித்து இதன் மூலம் ஓரளவிற்கு திரைப்படங்களின் வாய்ப்புகளை பெற்று அதன் பிறகு ஹீரோவாக நடித்து வருவார்கள் இதற்கு எடுத்துக்காட்டாக நடிகர் அருண் விஜய்யை சொல்லலாம்.ஆனால் விஜய் சேதுபதி வித்தியாசமாக ஹீரோவாக கலக்கி வந்து இதன் மூலம் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் உப்பண்ணா என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சில நாட்களிலேயே பல கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவருக்கு தற்போது சம்பளமும் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதோடு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் ரஜினி, விஜய் அவர்களுக்கு வில்லனாக நடித்து வந்துள்ள இவர் விரைவில் அஜித் திரைப்படம் ஒன்றிலும் வில்லனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே தனுஷ் திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார். அதாவது தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் டோவினோ தோமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் அந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கேட்டதாகவும் ஆனால் படக்குழுவினர் மறுத்துவிட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.