வர்றவன் போறவனுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது..! மீடியாவை சீண்டி பார்த்த நடிகர் விஜய் சேதுபதி..!

actor vijay sethupathi latest speech viral in social media: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் மக்களிடையே நல்ல பெயரை சம்பாதிப்பது மட்டும் அல்லாமல் சமீபத்தில் இவர் பேசிய ஒரு வார்த்தையின் மூலமாக தன்னுடைய ஒட்டு மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

இவ்வாறு அவர் சொன்ன வார்த்தையின் மூலமாக ரசிகர்கள் மட்டுமின்றி மீடியாக்களுக்கும் மிகுந்த கவலையை உருவாகிவிட்டது.  அந்த வகையில் சமீபத்தில் சேதுபதி இடம் ஒரு பெண் பேட்டி எடுத்துள்ளார். அப்பொழுது அவரிடம் நீங்கள் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி போங்கடா வெண்ணைகளா என்று எனக்கு நினைக்கத் தோன்றும் என சிரித்துக்கொண்டே செம்ம காண்டாகி பதிலளித்துள்ளார். இதுவே அவரை புகழ்ந்து இருந்தாள்  அவை நன்றாக இருந்திருக்கும் இதுவே நெகட்டிவ் கமெண்ட் என்பதன் காரணமாக அவருக்கு வெண்ணையாக தான் தெரியும் என மீடியாவும் செம கடுப்பில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதி போறவனுக்கு எல்லாம் பதில் சொல்றது எனக்கு வேலை கிடையாது என்றும் மற்றொரு வார்த்தையை வெளியிட்டுள்ளார் இதன் மூலமாக மேலும் ரசிகர்கள் மட்டுமின்றி மீடியாக்களுக்கு மிகுந்த கோபத்தை உருவாக்கி விட்டது. இவ்வாறு விஜய் சேதுபதி இன்று பிரபலமாக இருப்பதற்கு மீடியாவும் ஒரு முக்கிய காரணம்.

ஆனால் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் காரணத்தினால் இப்படி எல்லாமா பேசுவது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தன்னுடைய சுயநலத்தை மட்டுமே பார்த்து வருகிறார் சமூக நலன் கருதியும் பொதுமக்கள் நலன் கருதி எந்த ஒரு குரளும் கொடுத்ததில்லை.

ஆனால் தற்போது பிரபலமான பிறகு மேடையில் அவர் பேசும் பொழுது அவருடைய மனதில் இருக்கும் பல்வேறு விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக உருவாகிக் கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இவருக்காக சிவகார்த்திகேயனையெல்லாம் பகைத்துக் கொண்டதை நினைத்தால் மிகவும் மன வருத்தமாக இருக்கிறது என ரசிகர்கள் மறுபடியும் கட்சி மாற ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் ஒருவர் புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது அவரை எப்போது வேண்டுமானாலும் மீடியா இறக்கி விட்டு விடும் இது தெரியாமல் விஜய் சேதுபதி வார்த்தையை வெளியிட்டு வருகிறார்.

vijay sethupathi-1
vijay sethupathi-1

Leave a Comment