பீஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி.!

தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இயக்குனர்கள் தான் புதிய புதிய கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி மக்களிடையே வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் அறிமுக இயக்குனர் கே சன்பீர் இயக்கத்தில் ரம்யா நம்பீசன்,சித்திக்,ஆஷா சரத்,அதிதி ரவி போன்ற பல நட்சத்திரங்கள் பட்டாளம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்.

இந்த திரைப்படம் டெலிவரி பாயாக வேலை செய்யும் நபர்களை வைத்து தட்டித் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்து அதன்பிறகு பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து தற்பொழுது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து உள்ளது.

மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக படம் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை ஆனால் இந்த படத்தை பார்ப்பதற்கு மக்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு இந்த பஸ்ட் லுக் போஸ்டர் மாஸாக இருக்குவதால் படம் கூடிய சீக்கிரம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதில் ஒரு திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா,சமந்தா போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளாக நடித்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment