இந்தக் காரணத்தால தான் சூரிக்கு அப்பாவாக விஜய்சேதுபதி நடிக்கிறாரா.! பலே மூளைக்காரரா தான் போல

0

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாகும், வில்லனாகவும் பிரபலமடைந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இத்திரைப்படத்தில் விஜய் ஹீரோவாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் உப்பண்ணா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது திரைப்படம். இந்நிலையில் தற்போது தெலுங்கு, மலையாளம்,தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டிக்கும் செல்ல உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழில் சூரி நடித்து வரும் விடுதலை திரைப்படத்தில் சூரிக்கு அப்பாவாக  விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் வெளி வந்ததும் ரசிகர்கள் இளம் நடிகருக்கு அப்பாவாக போகிறீர்களா நீங்கள் என்று வருத்தப்பட்டு வந்தார்கள். இத்திரைப்படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாகவும்  சூரிக்கு அப்பாவாக வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்கள்.

இத்திரைப்படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படம் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு கதை என்று கூறப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் 1980ஆம் ஆண்டு தமிழ் தேசிய அமைப்பை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று படக்குழுவினர்கள் கூறி உள்ளார்கள்.

இந்த வகையில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்கள் ஆனால் விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளாராம். விஜய் சேதுபதி நடிக்க உள்ள இந்த திரைப்படத்தில் இவர்கள் தான் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த ரசிகர்கள் சோழியன் குடுமி சும்மா ஆடாதே அதானே பார்த்தோம்  என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டில் 20 நாட்கள் படமாக்கப்பட்டது.  தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.