ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விஜய், உண்மையை உடைத்த சேரன்!!

Actor vijay vs actor cheran: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்களுள் ஒருவர் தளபதி விஜய். சமீபகாலமாக விஜய் அவர்கள் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து திறமையை வெளிக்காட்டி மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு தளபதி விஜய் நடித்து வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது அதுமட்டுமல்லாமல் இப்படம் 300 கோடி வசூல் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் காதல் போன்ற திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி மக்களை கவர்ந்து வந்தார்.

அந்த நிலையில் சேரன் அவர்கள் இயக்கி மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறிய ஆட்டோகிராப் படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். ஆனால் இப்படத்தில் அவர் நடிக்க மறுத்ததால், சேரன் நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருப்பெற்றது மட்டுமல்லாமல் இப்படம் இன்றளவிலும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இப்டத்தின் முலம் பிரபலம் அடைந்தவர் சேரன்.

vijay
vijay

சேரன் அவர்கள் இதனை பல பேட்டிகளில் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த ரசிகர்கள் இப்படத்தில் விஜய் நடித்திருந்தார் வேறு ஒரு கோணத்தில் சென்று இருப்பார் என கூறிவருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment