நேற்று திடீரென நடந்த விஜய் மக்கள் இயக்க கூட்டம் !! விஜய் அரசியலில் குதித்து விட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! புகைப்படம் இதோ..

actor vijay meeting with his fan club photos: இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தை ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியின் படி பார்த்தால் தற்போது விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்துள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த இயக்கம் தற்போது அரசியலாக மாறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிலையில் நேற்று விஜய் அவர்கள் தனது அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இந்த இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை விஜய் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடிகர்கள் தொடர்ந்து அரசியலில் இறங்கி வருகிறார்கள். முதலில் ரஜினிகாந்த் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் இன்னும் அது பற்றி எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.

ஆனால் கமல் அரசியலில் களம் இறங்கி உள்ளார் அவரை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் மிக விரைவில் அரசியல் களத்தில் இறங்கப் போகிறார் என கருத்து வெளியாகி வருகிறது. விஜய் அவர்கள் தனது நிர்வாகிகள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment