விக்ரம் படத்தில் அந்த மாதிரி நடித்த நடிகையை லியோ படத்தில் லாக் செய்த லோகேஷ் கனகராஜ்.! இன்னும் விக்ரம் மட்டும்தான் மிச்சம்..

LEO-2
LEO-2

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் லியோ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தில் தற்பொழுது மேலும் ஒரு விக்ரம் பட பிரபலம் இணைந்திருப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.  இந்த படத்தின் டைட்டில், டீசர் ரிலீஸ் தெரியும் பட குழு அறிவித்திருக்கிறது அதன்படி லியோ திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜை ஸ்பெஷலாக அக்டோபர் 19ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் காஷ்மீரில் தொடங்கிய லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த படத்தில் நடிகை மாயா கிருஷ்ணன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்திருந்தார்.

இவ்வாறு லியோ திரைப்படத்திலும் இவர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லியோ படம் LCU முறையில் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கைதி படத்தில் நடித்த நரேன் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் விக்ரம் கிளைமாக்ஸ் சீனில் கார்த்தியின் குரலும் இடம்பெற்றது. எனவே லியோ படமும் லோகேஷின் யூனிவர்ஸ் படமாக உருவாகி வருகிறது.

MAAYA KIRUSHNAN
MAAYA KIRUSHNAN

அதற்காக விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்த பலரையும் லியோ திரைப்படத்தில் நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதன்படி நரேன், ஏஜெண்ட டீனா, கைதி படத்தின் நடித்திருந்த ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதனைத் தொடர்ந்து விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதமேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர்களும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்பொழுது விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்த மாயா கிருஷ்ணனும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை வைத்து விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்த கமல் மட்டும்தான் மிச்சம் இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் அவரும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை நடத்தல் நன்றாக இருக்கும் எனவும் கலாய்த்தும் வருகின்றனர்.