‘பீஸ்ட்’ பட பாணியை லியோவிலும் பின்பற்ற சொல்லும் லோகேஷ் கனகராஜ்.! ஒப்புக் கொள்வாரா தளபதி?

leo-1
leo-1

லியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக லோகேஷ் கனகராஜ் பல ஐடியாக்களை யோசித்து வரும் நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் செய்ததையே லியோ படத்தில் செய்யலாம் என முடிவெடுத்திருக்கும் நிலையில் இதனை விஜய் ஒப்புக் கொள்வாரா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் லியோ படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

இதனை அடுத்து சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக லியோ படத்தின் பாடல் தயாராகி வருகிறது. அதில் சுமார் 2000 நடன கலைஞர்களை வைத்து உருவாகி வரும் நிலையில் அந்த பாடலை விஜயை பாடி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரையிலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

தற்பொழுது ஒரு சில சண்டைக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூன் 12-ம் தேதிக்குள் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை முடித்துவிட்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ பட டீசரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் அப்டேட் சில மாதங்களாக வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் விஜய்யின் பிறந்தநாள் அன்று அப்டேட்டை வெளியிட்டால் கண்டிப்பாக அது மிகப் பெரிய ரிச்னை பெறும் எதிர்பாரப்படுகிறது. இவ்வாறு அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளைப் பற்றி லோகேஷ் கனகராஜ் யோசித்து வருகிறார். அப்படி விக்ரம் திரைப்படத்திற்கு கமல் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டது போலவே லியோ படத்திலும் பிரமோஷனுக்காக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என லோகேஷ் கனகராஜ் ஆசைப்படுகிறார்.

இவ்வாறு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றாலும் தனியாக பிரமோஷன்களையும் செய்ய வேண்டும் என யோகேஷ் கனகராஜ் விரும்புகிறாராம். அதன்படி பெஸ்ட் படத்தின் ப்ரோமோஷன்காக விஜய் எப்படி பேட்டி கொடுத்தாரோ அதேபோல் லியோ படத்திற்காகவும் விஜய் பேட்டி கொடுக்க வேண்டும் என யோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்து இருக்கிறாராம். மேலும் இது மட்டுமல்லாமல் விஜயை வைத்து இன்னும் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என முடிவெடுத்து இருக்கும் நிலையில் ஆனால் இதற்கெல்லாம் தளபதி ஒப்புக் கொள்வாரா என்பது தெரியவில்லை.