படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என தளபதி விஜய்க்கு அவதாரம் விதித்த நீதிமன்றம்..!

சமீபத்தில் தன்னுடைய சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட தளபதி விஜய்க்கு அறிவுரை கூறியது மட்டுமல்லாமல்  அபராதமும் விதித்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள். தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளன அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கூட 50 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். அதேபோல மாஸ்டர் திரைப்படத்திற்கு 80 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

இன்நிலையில் இவர் நடிக்க இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கினாள் கூட அது ஒரு பெரிய விஷயமே கிடையாது.  பொதுவாக பிரபலங்கள் சொகுசான கார் உபயோகிப்பது வழக்கம் தான் அந்த வகையில் ஆடி பிஎம்டபிள்யூ போன்ற பல்வேறு களை பயன்படுத்தி வருகிறார்கள்.

vijay-2
vijay-2

அந்த வகையில் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் தமிழ்நாட்டில் இருவர்கள் மட்டும்தான் இந்த காரை பயன்படுத்தி வருகிறார்கள் அதில் தளபதி விஜய்யும் ஒருவர் இந்த காரனது கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

மேலும் இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததுமட்டுமல்லாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் அந்த காரை பதிவு செய்யவில்லை. இதன்காரணமாக ஊறிய வரியை செலுத்த வேண்டும் என தளபதி விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

vijay-2
vijay-2

Leave a Comment