கேரளாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய விஜய் அதுவும் எந்த படத்தின் மூலம் தெரியுமா.?

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர், தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது ஆனால் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக விஜய் திரைப்படம் அசால்டாக 200 கோடியை வசூல் செய்து பிரமிக்க வைக்கிறது, ஒரே மொழியில் ரிலீசாகி இந்த வசூலை பெறுவது மிகப் பெரிய சாதனைதான், தமிழகத்தில் விஜய்க்கு எந்த அளவு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அந்த அளவிற்கு வெளி மாநிலங்களிலும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அதேபோல் வெளிமாநிலங்கள் ஆனா கேரளாவில் அந்த மாநிலத்தில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருப்பது போல் விஜய்க்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, தளபதி விஜய் திரைப்படம் வந்தாலே  கொண்டாடித் தீர்த்து விடுவார்கள், கேரளாவில் இத்தகைய கூட்டமும் கொண்டாட்டமும் விஜய்யின் எந்த திரைப்படத்தில் இருந்து கிடைத்தது தெரியுமா? 2007 ஆம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகிய போக்கிரி திரைப்படத்தின் மூலம் தான் இவ்ளோ பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் விஜய் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது, விஜய்யின் இந்த திரைப்படம் தான் கேரளாவில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது இதனால் கேரளாவில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினார் விஜய்.

Leave a Comment