சீன் போட்டு சின்னா பின்னமான விஜய்.! 40 பேரிடம் அடி வாங்கிய சம்பவம்.. வைரலாகும் வீடியோ.!

thalapathy-67
thalapathy-67

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை தனக்கென ஒரு  இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதற்கு முன்பு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் வெளியிடப்பட்டது.

மேலும் தற்பொழுது வாரிசு திரைப்படம் ott இணையதளத்திலும் வெளியாகிவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் இதுக்கு முன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சமீப காலமாக விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் விஜயின் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் விஜயின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் விஜய் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது. நான் காலேஜ் படிக்கும் பொழுது வெளியே சுற்றுலா சென்று இருந்தோம்.

அப்பொழுது ட்ரெயினில் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு நபர்கள் எங்களுடன் வந்த சக தோழிகளை கலாட்டா செய்து வந்தார்கள் ஆனால் அப்பொழுது நாங்கள் 10 பேர் இருந்ததால் அந்த இரண்டு பேரையும் அடித்து துவைத்து விட்டோம் ஆனால் அந்த கொஞ்ச நேரத்தில்  இரண்டு பேரும் சென்று 40 பேரை அழைத்து வந்து விட்டார்கள் அதன்பிறகு சொல்லவா வேண்டும் 40 நபர்களும் எங்களை அடித்து துவைத்து விட்டார்கள் எங்களால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடித்து விட்டார்கள் .

அதிலும் என்னுடைய நண்பர் ஒரு சிலர் கட்டு போட்டுக்கொண்டு மெட்ராஸ் வந்த சம்பவமும் நடந்தது இதனை விஜய் சிரித்துக் கொண்டே ஜாலியாக பேட்டியில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..