தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா.இவர் பிரபல நடிகை ஒருவருக்கு பிறந்த நாள் பரிசாக சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த நடிகை பெரும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் வெளிவந்த காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே விக்ரம் நடிப்பில் வெளிவந்த 10 என்றதுக்குள்ள திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய இறந்தவர். அதன்பிறகு தமிழை விட தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்தார் அந்தவகையில் ஹீரோயினாகவும் கவர்ச்சியிலும் நடித்து பிரபலம் அடைந்தார்.
இவ்வாறு ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு ஒரு காலத்திற்குப் பிறகு திரைப்படம் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே படம் தயாரிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் தெலுங்கில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவருக்கு பிறந்த நாள் என்பதால் பல பிரபலங்கள் ரசிகர்கள் என்று அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி வந்தார்கள். அந்தவகையில் தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா சார்மிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் சப்ரைஸ் ஒன்றை அனுப்பி உள்ளார்.அந்த கிப்டின் மேல்பகுதியில் ஹாப்பி பர்த்டே சார்மி ஃபுல் லவ் விஜய் தேவர் கொண்டா என்று குறிப்பிட்டுள்ளது.

அதோட சார்மி தயாரித்து வரும் நிகர் திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா தான் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.