லாக் டவுனில் நண்பர்கள் தினத்தை வீடியோ காலில் கொண்டாடிய நடிகர் விஜய்.!! ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகர் சஞ்சீவ். இதோ பாருங்க.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து திரையில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். கொரோனா காரணமாக இந்த  திரைப்படம் வெளிவர தாமதமாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நண்பர்கள் தினத்தை அனைவரும் வீட்டில் இருந்துகொண்டே கொண்டாடி பகிர்ந்தனர். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்.

அந்த வகையில் நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில்  உரையாடி நண்பர்கள் தினத்தை கொண்டாடினார். அந்த புகைப்படத்தை அவரது நண்பரான நடிகர் சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் விஜய்க்கு நாளுக்கு நாள் இளமை கூடிக்கொண்டே இருக்கிறது என கூறியுள்ளார்கள்.