விஜய் ஆண்டனியின் மனைவி இந்த தொலைக்காட்சி தொகுப்பாளரா.! தனது காதல் மனைவி குறித்து கூறி நடிகர்

நடிகர் விஜய் ஆண்டனி முதல் முறையாக தனது காதல் திருமணம் குறித்து அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அனைவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் ஏதாவது ஒரு நல்ல தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் இவருடைய படங்கள் அமைந்து வருகிறது.

அதேபோல் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளிவந்த சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காலி, திமிர் பிடித்தவன் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் பெற்றிருக்கிறது. இதனையடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

இவ்வாறு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி தனது மனைவியுடன் இணைந்து பிச்சைக்காரர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் எனவே இதனை அறிந்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்பொழுது விஜய் ஆண்டனியின் நடிப்பில் கொலை என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படம் வருகின்ற 21ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது எனவே இதனால் விஜய் ஆண்டனி கொலை படத்திற்காக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

vijay antony
vijay antony

அவர் கூறுகையில், சுக்ரன் படம் ரிலீஸ் ஆனபோது தான் பாத்திமா எனக்கு போன் செய்து பாராட்டினார் சில மணி நேரம் அவருடன் பேசி இருந்தேன் பின்ன அவர் வீட்டிற்கு வர சொல்லி என்னை அழைத்தார். அப்பொழுது அவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பிறகு என்னுடைய அம்மாவுடன் எளிமையாக பேசினார் எனக்கு அவரை காதலிக்கலாம் என்று தோன்றியது.

அதன் பிறகு தான் அவருடைய வீட்டிற்கு நான் சென்றேன் உங்கள் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கிற எண்ணம் இருந்தால் அதில் என்னுடைய பெயரை சேர்த்து விடுங்கள் என்று சொன்னேன் உடனே அவர் சிரித்தார் அதன் மூலம் அவருக்கு என்னை பிடித்தது தெரியவந்தது. அதன் பிறகு நாங்கள் இருவீட்டார் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறியுள்ளார். தற்பொழுது திருமணத்திற்கு பிறகு பாத்திமா தயாரிப்பு பணிகளை பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment