நடிக்கும் அனைத்து படங்களும் சுமார் வெற்றி ஆனால் சம்பளம் மட்டும் இத்தனை கோடியாம்.! திடீரென தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர் விஜய் ஆண்டனி..

vijay-antony
vijay-antony

இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்போது ஹீரோவாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சுமாரான வெற்றியை தான் இந்த திரைப்படங்கள் பெற்று இருந்தது இதனைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் அம்மா சென்டிமெண்டாக இருந்ததால் அந்த படத்தின் பாடல் மற்றும் கதைகள் பலரையும் கவர்ந்தது இந்த படத்திற்கு பிறகு தான் இவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

இந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் வெளிவரும் எந்த திரைப்படங்களும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை அந்த வகையில் சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி போன்ற அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வினை அடைந்தது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் இந்த திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய சம்பளத்தை 5 லட்சமாக உயர்த்தி உள்ளார்.

இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இவ்வாறு பிச்சைக்காரன் திரைப்படத்தை தவிர வேறு எந்த திரைப்படங்களும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை இவருடைய சம்பளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் இவ்வாறு இவர் கூறியதால் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுக்க யோசித்து வருகிறார்கள். இவ்வாறு விஜய் ஆண்டனியின் படங்கள் வெற்றி அடையவில்லை என்றாலும் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது மேலும் இவர் ஏதாவது ஒரு கருத்தை சமூகத்திற்கு சொல்லும் வகையில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.