ஒரே நாளில் வெளியாகும் அஜித்,விஜய், சிம்பு திரைப்படங்கள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

அப்பொழுதெல்லாம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அனைத்து நடிகருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கு விமர்சன ரீதியாக ஏதாவது தவறு ஏற்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ஒரே நாளில் அஜீத், விஜய், சிம்பு ஆகியோர் நடித்துள்ள திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது.மே 1ஆம் தேதி அரசு விடுமுறை மற்றும் அன்று அஜித்தின் பிறந்தநள் என்பதால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அஜித்தின் பிறந்த நாளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் அதே தேதியில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இவ்வாறு ஜீ தமிழ் ஒளிபரப்பாக இருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படமும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் ஒரே நேரத்தில் ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதால் இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே டிஆர்பி ரேட்டிங் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் மே ஒன்றாம் தேதி அன்று சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வெளியாக இருக்கிறது.இந்த திரைப்படத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருந்தாலும்அஜித் மற்றும் விஜய் யின் திரைப்படங்களுக்கு தான் டிஆர்பி ரேட்டிங்கை கண்டிப்பாக பார்ப்பார்கள்.

Leave a Comment