ராஷ்மிகாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு பூஜாவுக்கு ஓகே சொன்ன விஜய்..! தளபதி 66 திரைப்படத்தின் புதிய அப்டேட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது வெளியான இரண்டு நாட்களிலேயே 4 கோடி பேர் இந்த பாடலை ரசித்து உள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் இப்பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிய உள்ளது இதன் காரணமாக அடுத்ததாக நடிகர் விஜய் தெலுங்கு பிரபல இயக்குனரான வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இத்திரைப்படம் விஜயின் 66வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 66வது திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரிக்க உள்ளார்.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது பொதுவாக விஜயின் படம் என்றாலே அதில் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் குறைந்தது ஆறு பாடல்களில் இடம்பெறும் என்று கூறி உள்ளார்கள். இப்படியிருக்க பீஸ்ட் திரைப்படத்தில் மொத்தமாகவே ஒரே ஒரு பாடல்தானாம்.  அந்தப் பாடலும் சமீபத்தில் அரபி குத்து வெளியானது ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் பிரபலமடைந்து இருந்தாலும் ஏராளமான ரசிகர்கள் இந்த பாடலின் வரிகள் புரியவில்லை என்று கூறி வருகிறார்கள் இந்த பாடலை எழுதியவர் சிவகார்த்திகேயன்.

பொதுவாகவே முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தால் நடிகைகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது அதே போல்தான் பீஸ்ட் திரைப்படத்திலும் பூஜா ஹெக்டேக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்று கூறப்படுகிறது.  இதன் காரணமாக விஜய் தன்னுடைய அடுத்த படத்தின் வாய்ப்பை பூஜா ஹெக்டேக்கு கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ஆனால் படக்குழுவினர் தரப்பில் ராஷ்மிகாவை முடிவு செய்துள்ளார்களாம்.

எனவே இதன் காரணமாக ஹீரோயின் யார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் விரைவில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version