விஜயின் 66வது திரைப்படத்தை இயக்கபோவது இந்த மாஸ் இயக்குனரா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! யார் தெரியுமா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் மாஸ்டர்.இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 240 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் தளபதி விஜயின் 65ஆவது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து தளபதியின் 66வது படத்தை குறித்து பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில்  தற்பொழுது அந்த திரைப்படத்தையும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்க உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து 2 புதிய படங்களை இயக்கி வருகிறார்.

Leave a Comment