தளபதி 65 படத்தின் மையக்கதை இதுதான்.! இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்ததே இல்லையாமே.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் இப்படத்தின் பல அப்டேட்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் 65ஆவது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைக்க உள்ளார்.

இப்படம் மிகவும் மிரட்டலான ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள்.  அதோடு இப்படத்தில் விஜய் போலீஸ் ஏஜென்டாக தான் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தார்கள்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்பொழுது இப்படம் மிகவும் மிரட்டலான ஆக்சன் படம் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை ஒரு நேர்காணலில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் விஜய் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்.

எனவே விஜய் மிகவும் கூர்மையான புத்தி உடனும் வழக்கம்போல் கொஞ்சம் காமெடியும் கலந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜயின் 65 ஆவது திரைப்படங்களைப் பற்றிய வரும் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment