புதியதை நோக்கி ஓடும் வனிதா எல்லாத்தையும் மாற்றுவது வழக்கம் இந்த தடவை மதத்தை ஏமாற்றினாரா.?

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி,மராத்தி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் பலருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை வனிதா. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கெட்ட பெயர் தான் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தற்பொழுது சில படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  இவர் மூன்று திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

வனிதா சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானார். அந்தவகையில் இவர் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். இந்நிலையில் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் விஜயுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்.

பிறகு அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடங்கி தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது வனிதா படப்பிடிப்பில் இருக்கும் பொழுது ஹரிதா என்பவர் வனிதாவிற்கு ஒரு ஓவியம் அறிந்து அன்பு கடிதமாக தந்துள்ளார்.

அந்த கடிதத்தை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டு இருந்தார்.  அந்தக் கடிதத்தில் இன்ஷா அல்லாஹ் என்ற பெயர் உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் வனிதா வேறு மதத்திற்கு மாறிவிட்டார் என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment