அமைச்சர் பதவி ஏற்ற உடன் “சினிமாவுக்கு முழுக்கு” போட்ட உதயநிதி ஸ்டாலின் – கடைசி திரைப்படம் எது தெரியுமா.?

தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் அதன் பிறகு அரசியலில் களம் கண்டார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்பொழுது சினிமா, அரசியல், வியாபாரம் என மூன்றிலும்..

வெற்றி கண்டு கலக்கி கொண்டு வருகிறார். குறிப்பாக  அரசியலில் எம்எல்ஏவாக சிறப்பாக பயணித்து வந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது அமைச்சராக பொறுப்பேற்றார் அவருக்கு இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது அதை வெற்றிகரமாக ஏற்று கொண்டார்.

கலைஞரைத் தொடர்ந்து அவரது மகன் மு க ஸ்டாலின் முதலமைச்சராக தற்போது இருக்கிறார். அவர்கள் வழிவந்த உதயநிதி ஸ்டாலினும் அமைச்சரவை பொறுப்பை செவ்வனே செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து கட்சி நிர்வாகி தொண்டர்கள்.

என அனைவரும் வெடி வெடுத்து இனிப்பு வழங்கி கொண்டனர் பதவி ஏற்ற பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின் இனி அரசியலில் முழு கவனத்துடன் செயல்பட போவதாக கூறினார். மேலும் பேசிய அவர் என்னுடைய கடைசி திரைப்படம் மாரி செல்வராஜுடன் இணைந்த மாமன்னன் திரைப்படம் தான் என கூறினார்.

இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது மேலும் பேசிய அவர் கமலஹாசன் படத்தில் நடிப்பதாக அறிவித்ததில் இருந்து விலகி கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment