நடிகர் உதயநிதி ஸ்டாலினின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களின்  படங்களை ரெட்ஜெயன்ட் மூவி நிறுவனத்தின் மூலம் தயாரித்து உதயநிதி ஸ்டாலின் வெளியீடு செய்து வந்தவர். உதயநிதி ஸ்டாலின் பின் ஒரு கட்டத்தில் நடிக்கவும் தொடங்கினார். முதலில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அந்த படம் வெற்றியை ருசிக்க அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் அந்தவகையில் சந்தானத்துடன் இரண்டாவது முறையாகவும் கைகோர்த்து நண்பேண்டா படத்தில் நடித்தார். தொடர்ந்து காமெடி படங்களை நடித்தாலும் ஒருகட்டத்தில் தனது திறமையை காட்டும் வகையில் கண்ணேகலைமானே, மனிதன், சைக்கோ போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் ராஜா காமராஜ் இயக்குனருடன் கைகோர்த்து நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் நேற்று கோலாகலமாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ஹிந்தியில் வெளியான ஆர்டிகல் 15  திரைப்படத்தின் ரீமேக்காக்கும்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளதால் முதல் வாரம் ஹவுஸ்புல்லாக ஓடும் என்பதே சினிமா பிரபலங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் வடிவேலு காமெடியான நடிக்கிறார்.

இப்போ ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது உதயநிதி ஸ்டாலின் எவ்வளவு சொத்து குவித்து வைத்துள்ளார் என்பது குறித்து பார்ப்போம் அதன்படி உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு சுமார் 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version