மாமன்னன் படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.?

சமுதாயத்தில் நடக்கும் சில அநியாயங்களை தட்டி கேட்க வேண்டும் அதற்கு முதலில் மக்கள் திருந்த வேண்டும் என்பதையும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதனை மையமாக வைத்து ரசிகர்களுக்கு நல்ல கருத்து சென்றடைய வேண்டும் என தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் தான் நடிகர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான இவர் இதனை அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தினை இயக்கி இருந்தார்.

இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. இவ்வாறு இரண்டு திரைப்படங்களும் வெற்றிப் பெற்ற நிலையில் தற்போது இவர் உதயநிதியின் கடைசி படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாமன்னன் இது உதயநிதியின் கடைசி படமாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் வடிவேலு, பகத் பாஸில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வடிவேலு, பகத் பாஸில் அவர்களுடைய கதாபாத்திரம் நல்ல பாராட்டினை பெற்றிருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு பெரிதாக கேரக்டர் அமையவில்லை இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து தனுஷ், ரஜினி, கமல் என பலரும் பாராட்டுகளை பட குழுவினர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த படம் வெளியாகி ஐந்து நாள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் மொத்தமாக ரூபாய் 40 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இவ்வாறு உதயநிதியின் கடைசி படம் மாமன்னன் நல்ல வெற்றிலை பெற்றிருப்பதால் சந்தோஷத்தில் மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்காக ரூபாய் 5 கோடி வரை சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Comment