நடிகர் திலகம் சிவாஜியின் அடுத்தடுத்த வாரிசுகள் நடிகர்கிறார்.. புதிதாக தர்ஷன்னும் லிஸ்டில் இணைந்து உள்ளார்.. அச்சு அசல் அவரை போல..

சினிமா உலகில் முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் அடியெடுத்து வலம் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இது ஒரு சில பேருக்கு பிடிக்காமல் இருந்து வருகிறது. இருப்பினும் அவரது குடும்பம் சினிமாவை சார்ந்தே வந்துள்ளதால் வேறு வழி இல்லாமல் சினிமாவை பின்பற்றுகின்றனர் அப்படி சிவாஜிக்கு பிறகு அவரது மகன் பிரபு அவரைத் தொடர்ந்து விக்ரம் பிரபு ஆகியோர் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு பெயர் போனவர் என்றால் நமக்கு உடனே வருபவர் நடிகர் திலகம் சிவாஜி. இவரது இடத்தை எந்த ஒரு நடிகரையும் நிரப்ப முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அது அவரது மகனாகவே இருந்தாலும் சரி இவரது இடத்தை பிடிக்க முடியாது.

பிரபு என்னதான் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அப்பாவை இடத்தை பிடிக்க முடியாமல் போனது என்பது தான் உண்மை.

அதன் பிறகு பிரபுவின் மகன் விக்ரம் சினிமாவுலகில் சிறப்பான திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் அவரால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை கூட பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு தவிர வேறு யாரும் நடிக்க முன்வரவில்லை என எதிர்பார்த்த நிலையில் சிவாஜியின் மற்றொரு பேரன் சிவாஜி தேவ் சில படங்களில் நடித்து வந்தார். அதன் பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் தற்போது சினிமாவில் ஹீரோவாக களம் இறங்க உள்ளார்.

சிவாஜி, பிரபு பிறகு சினிமாவில் அவரது குடும்பம் நிலையான இடத்தை பிடிக்க முடியாத நிலையில் அடுத்தடுத்த சிவாஜி பேரன்கள் சினிமாவில் நடிப்பதால் மக்கள் சற்று குழப்பமாகி போயிருக்கின்றனர்.

இவராவது சினிமா உலகில் வெற்றி காண்பாரா என்பது ஒருபக்கம் ரசிகர்களின் கேள்வி குறியாக இருந்து வருகிறது.

darshan
darshan
darshan
darshan

Leave a Comment